தமிழில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து போரடித்து போய் மலையாள பட உலகின் பக்கம் தன் பார்வையை திருப்பி இருக்கிறாராம் பசுபதி.
வசந்தபாலனின் அரவான் படத்துக்காக கடுமையாக உடற்பயிற்சியில் இறங்கி, தாடி-மீசை வளர்த்து படத்தில் வரும் கதாபாத்திரத்திற்காக அதிகம் சிரமப்பட்டுள்ளாராம்.
ரசிகர்கள் இந்த கதாபாத்திரத்தை அதிகம் விரும்பி ரசிப்பார்கள் என அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், மலையாளத்தில் சுவாரஸ்யமான கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என துடித்தேன். மதுரை பஸ் என்ற படத்தில் நான் விரும்பிய கதாபாத்திரத்தில் நடிக்கிறேன்.
இதில் சிறைப்பறவையாக நடித்துள்ளேன். இந்தப்படம் விரைவில் வெளி வர உள்ளது என்றும் பசுபதி தெரிவித்துள்ளார்.
டிசம்பர் மாதம் துவங்க உள்ள எஸ்.எம்.எஸ்.நகர் என்ற படத்தில் பசுபதி நடிக்க உள்ளார். வட சென்னையை மையமாக வைத்து இயக்குநர் லட்சுமி காந்தன் இயக்கும் இரண்டு கதாநாயகர்களில் ஒருவராக பசுபதி வருகிறார்.