.

Home » » உடல் உறுப்புகளை தானம் செய்யும் கமல் ரசிகர்கள்

உடல் உறுப்புகளை தானம் செய்யும் கமல் ரசிகர்கள்


நடிகர் கமலஹாசன் பிறந்தநாள் விழாவை வருகிற 7ம் திகதி ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்.
இதையொட்டி ஏழைகளுக்கு நிறைய நலத்திட்ட உதவிகளும் வழங்குகின்றனர். 7 ரசிகர்கள் உடல் உறுப்பு தான உறுதிமொழியை அளிக்கவுள்ளனர்.
இதுகுறித்து கமல் நற்பணி இயக்கப் பொறுப்பாளர் ஆர்.தங்கவேலு விடுத்துள்ள அறிக்கைகள் பல உள்ளன.
பத்மஸ்ரீ கமல்ஹாஸன் பிறந்த நாளையொட்டி வருகிற 6ம் திகதி காலை 8 மணிக்கு தென் சென்னை மாவட்ட கமல் நற்பணி இயக்கம் சார்பில் சாந்தோம் காக்கும் கரங்கள் முதியோர் இல்லத்தில் 100 பேருக்கு வேட்டி, சேலை மற்றும் உணவு வழங்கப்படுகிறது.
9 மணிக்கு சேத்துப்பட்டில் ரசிகர்கள் 100 பேர் ரத்ததானம் செய்கின்றனர். ராயபுரம் பி.எஸ்.என்.ஆர். மருத்துவமனைக்கு 25 கல்லூரி மாணவ, மாணவிகள், 100 ரசிகர்கள் ரத்ததானம் செய்கின்றனர்.
7 ரசிகர்கள் உடல் உறுப்பு தானம் செய்து பத்திரங்களை வழங்குகிறார்கள். பெரம்பூரில் குழந்தைகள் காப்பகத்துக்கு மளிகை பொருட்கள் மற்றும் சீருடை, உணவு வழங்குகின்றனர்.
ஆழ்வார்பேட்டையில் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உணவு வழங்குகின்றனர்.
7ம் திகதி திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கமல் மன்றம் சார்பில், 50 ஆட்டோ ஓட்டுநருக்கு சீருடை, 50 பெண்களுக்கு புடவை வழங்கப்படுகின்றது.
பாரிமுனை ராஜா அண்ணாமலை புரத்தில் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, தையல் எந்திரம் 58 பேருக்கு வேட்டி, சேலைகள் வழங்கப்படுகின்றன என்று கூறியுள்ளார்.

Share this article :

சிறப்பு செய்திகள்

 
Support : Copyright © 2011. Daily News Bit - Tamil News - All Rights Reserved