கோப் எனப்படும் பொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்ற செயற்குழு விசாரணை நடவடிக்கைகள் இந்த மாதம் 15 ம் திகதியுடன் நிறைவுறுத்தவுள்ளதாக அதன் தலைவர் சிரேஷ்ட அமைச்சர் டிவ் குணசேகர தெரிவித்துள்ளார்.
திணைக்களம் மற்றும் அமைச்சுகள் அற்ற 249 அரசநிறுவனங்கள் தற்போது ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
கடந்த வருடம் மார்ச் மாதம் அளவில் நியமிக்கப்பட்ட 31 ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்களை கொண்ட குழு கோப் விசாரணையில் ஈடுபட்டு வருகிறது.
அந்த குழுவினால் 12 அரச நிறுவனங்களின் ஊழல் மற்றும் மோசடி தொடர்பில் கடந்த வருடம் விசாரணை மேற்கொள்ளப்பட்ட போதும்இ இந்த வருடம் அனைத்து அரச நிறுவனங்களின் பிரதானிகளும் குழுவின் முன்னிலையில் அழைக்கப்பட்டதாக சிரேஷ்ட அமைச்சர் டிவ் குணசேகர தெரிவித்துள்ளார்.