.

Home » » 13+ தீர்வு என நான் கூறியிருந்தாலும் தெரிவுக்குழுவே இறுதி முடிபு எடுக்கும் ஜனாதிபதி அதிரடி

13+ தீர்வு என நான் கூறியிருந்தாலும் தெரிவுக்குழுவே இறுதி முடிபு எடுக்கும் ஜனாதிபதி அதிரடி

13-வது திருத்தச் சட்ட மூலத்திற்கு அப்பால் சென்று இனப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு தான் சம்மதம் தெரிவித்திருந்தா லும் அதன் இறுதி முடிபை நாடாளுமன்றத் தெரிவுக்குழுவே எடுக்கும். இவ்வாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்­ஷ அதிரடியாக அறிவித்துள்ளார். இலங்கையில் இருந்து வெளியாகும் பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர்களுடனான சந்திப்பு நேற்று நடைபெற்ற போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு மேலும் கூறுகையில், சமாதானப் பேச்சு வார்த்தைகளுக்கு வரும் போது தமிழீழ விடுதலைப்புலிகள் நடந்து கொண்டதைப் போலத்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் நடந்து கொள் கின்றார்கள் என கடும் தொனியில் கூறியுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ­, அவர்கள் பேச்சுவார்த்தைகளுக்கு வருகின்றார்கள்; பின்னர் வெளிநடப்பு செய்கின்றார்கள்; அதன் பின்னர் நிபந்தனைகளுடன் பேசவேண்டும் எனக் கேட்கின்றார்கள். இலங்கையின் இனப்பிரச்சினைக்கு அர சியல் தீர்வை காண்பதற்காக அரசியல் அமைப்புக்கான 13வது திருத்தச் சட்டத்திற் கும் மேலாக செல்வதற்குதான் தயாராக இருப்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணாவுக்கு உறுதியளித்தி ருந்தாலும், இது தொடர்பாக நாடாளுமன்ற தெரிவுக்குழுதான் இறுதி முடிபை எடுக்க வேண்டும்.

இதற்காக, நாடாளுமன்றத் தெரிவுக் குழுவை நியமிப்பதற்காக அனைத்துக் கட்சிகளின் கூட் டம் ஒன்றை நான் விரைவில் கூட்டவுள்ளேன். அதிகாரப் பரவலாக்கலை எவ்வாறு மேற்கொள்வது என்பதையிட்டு நான் தனித்து தீர்மானிக்க போவதில்லை.

மாகாண சபைகளுக்கு எவ்வாறான அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பது என்பதையிட்டு நாடாளுமன்றமே இறுதி முடிபை எடுக்கும் என்றார். இந்திய வெளிவிவகார அமைச்சர் கிருஸ்ணாவுடனான பேச்சுவார்த்தைகளின் போது அரசியல் அமைப்புக்கான 13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி அதற்கு மேலாக செல்வதற்கும் தயாராக இருப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ­ வாக்குறுதி அளித்திருப்பது தொடர்பாக வெளிவந்திருந்த செய்திகளையிட்டு பத்திரிகை ஆசிரியர்கள் இச்சந்திப்பில் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்த ஜனாதிபதி, இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு தான் அவ்வாறு தெரிவித்திருந்தாலும், அது தொடர்பாக நாடாளுமன்ற தெரிவுக்குழுதான் இறுதி முடிபை எடுக்கவேண்டும் எனக் கூறினார். இன நெருக்கடிக்கான அரசியல் தீர்வு தொடர்பில் இறுதி முடிபை எடுப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழுவிற்கான தமது உறுப்பினர்களின் பெயர்களை தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பு இதுவரையில் பரிந்துரைக்காமல் இருப்பதையிட்டு கடுந்தொனியில் குறிப்பிட்ட ஜனாதிபதி , பேச்சுவார்த்தைகளிற்கு வரும்போது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் விடுதலைப் புலிகள் போன்றே செயற்படுகின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்
Share this article :

சிறப்பு செய்திகள்

 
Support : Copyright © 2011. Daily News Bit - Tamil News - All Rights Reserved