தோல்வியை தோற்கடி
என் குருதி இன்னும்
காயவில்லை ..
தமிழும் சோரம்
போக வில்லை
விதையாய் விழுந்து இருக்கிறேன்
சதைகள் தான் அழியும் -நம்
சரித்திரம் அழியாது
உடல்கள் தான் புதையும்
தமிழ் உணர்சிகள்
புதையாது
காலம் நம்மை ஏமாற்றியது
கருத்துகள் மாறாமல்
வேருன்றியது
மண்டியிட்டு மாடிபவர் அல்ல நாம்
மார் கிழித்து ஏந்தினோம்
உன் துரோகத் தோட்டாக்களை
புண்கள் நமக்குப்
பண்பாட்டு போனவை
புதைகுழிகள் நமக்குப்
பண்பாட்டுப் பேரவை
நாம் வீட்டு முற்றங்கள் கூட
வீரங்கள் விளைபவை
கல்லறை முன் என் கலங்குகிறாய்
முடிந்தால் கதவு வைத்துச் செல்
கல்லறைக்குள்ளும்
துடித்துக் கொண்டு இருக்கின்றனா
நம் - கரங்கள் துப்பாக்கி ஏந்த- கேளாய்
மறித்து விடவில்லை தமிழ் மகன்
{அன்பு முகிலன் }