தமிழ்தேசிய கூட்டமைப்பினருக்கும் அரசாங்கப்பிரதிநிதிகள் குழுவினருக்கும் இடையிலான சந்திப்பொன்று நாளை செவ்வாய்க்கிழமை மாலை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை அரசாங்கத்தின் பேச்சுவார்த்தை குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரஜீவ விஜயசிங்க தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், அரசாங்கத்துக்கும் தமிழ்தேசியக்கூட்டமைப்பினருக்கும் இடையிலான பேச்சுவார்த்தை செவ்வாய்க்கிழமை மாலை 3 மணிக்கும் இடம்பெறும். அரசாங்கத்தின் சார்பில் அமைச்சர் நிமால் சிறிபால டி.செல்வா, பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், மற்றும் பாரளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்த்தன ஆகியோரும் கலந்துகொள்கின்றனர்.
எனக்கு தெரிந்த வகையில் கூட்டமைப்பின் சார்பில் இரா. சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், சுமந்திரன் ஆகியோர் கலந்துகொள்வார்கள் என்று தெரிவித்துள்ளார்.
இதேவேளை செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைகளின் போது மாகாண சபைகளுக்கு காணி அதிகாரங்களை வழங்குவது தொடர்பிலேயே பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.