.

Home » » சுரேஷ் கல்மாடிக்கு டெல்லி ஐகோர்ட் ஜாமின்

சுரேஷ் கல்மாடிக்கு டெல்லி ஐகோர்ட் ஜாமின்


காமன்வெல்த் போட்டிகளின் போது முடிவுகளை அறிவிக்கும் டைமிங் ஸ்கோரிங் ரிசல்ட் உபகரணத்தை நிறுவுவதற்கு சுவிட்சர்லாந்து நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. 

இந்நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட ஒப்புதலின் மூலமாக, அரசிற்கு ரூ. 90 கோடி அளவிற்கு இழப்பை ஏற்படுத்தியதாக, சுரேஷ கல்மாடி மற்றும் காம்ன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஒருங்கிணைப்பு குழுவின் முன்னாள் இயக்குனர் வி.கே.வர்மா உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்திருந்தது. 
 
கல்மாடி ஜாமின் குறித்து, டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இம்மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் சுரேஷ் கல்மாடிக்கு இன்று (19/01/2012) ஜாமீன் வழங்கியது. ரூ 5 லட்சத்துக்கான பிணைத்தொகையின்பேரில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் காமன்வெல்த் போட்டிக்குழுவின் முன்னாள் இயக்குநர் ஜெனரல் விகே.வர்மாவுக்கும் டெல்லி உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
Share this article :

சிறப்பு செய்திகள்

 
Support : Copyright © 2011. Daily News Bit - Tamil News - All Rights Reserved