ஆந்திராவில் நடிகர் சிரஞ்சீவி. சில ஆண்டுகளுக்கு முன்பு பிரஜா ராஜ்ஜியம் என்ற கட்சியை தொடங்கினார். அக்கட்சி 18 இடங்களில் வெற்றி பெற்றது. அதில் ஒரு எம்.எல்.ஏ. ஜெகன்மோகன் ரெட்டியை ஆதரித்து வருகிறார். இந்நிலையில் தனது கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் சில மாதங்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியில் சிரஞ்சீவி இணைந்தார்.
கடந்த மாதம் ஆந்திர அரசு மீது தெலுங்குதேசம் கட்சி நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தது. அப்போது காங்கிரஸ் அரசுக்கு ஆதரவாக பிரஜா ராஜ்ஜியம் கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஓட்டுப்போட்டனர். அப்போது சிரஞ்சீவி காங்கிரஸ் மேலிட தலைவர்களிடம் தனது கட்சியைச் சேர்ந்த 2 பேருக்கு மந்திரி பதவி அளிக்கும்படி கேட்டுக்கொண்டார்.
இதன்படி அவரது கட்சியைச் சேர்ந்த கண்டா சீனிவாசராவ், ராமச்சந் திரய்யா ஆகியோருக்கு மந்திரி பதவி அளிக்க காங்கிரஸ் மேலிடம் முன் வந்தது. இதையடுத்து இன்று இருவரும் ஆந்திர கவர்னர் மாளிகையில் நடந்த விழா வில் மந்திரிகளாக பதவி ஏற்றுக் கொண்டனர். அவர்களுக்கு கவர்னர் நரசிம்மன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இவர்கள் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டதன்மூலம் ஆந்திர அமைச்சரவையில் முதல்வரையும் சேர்ந்து 39 பேர் உள்ளனர். மேலும் 5 அமைச்சர் பதவிகள் நிரப்பப்படாமல் உள்ளன. இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சி முக்கிய தலைவர்கள், சிரஞ்சீவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.