தானே புயலால் சேதமடைந்த பகுதிகளை பார்வையிடுவதற்காக பிரான்ஸ் நாட்டின் அமைச்சர் ஈடோவ்ரத்கோர்ட்டியல் இரண்டு நாள் பயணமாக புதுச்சேரிக்கு வருகை தந்தார்.
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியின் வேண்டுகோளுக்கு இணங்க சேதமதிப்புகளை நேரில் பார்வையிட்டு நிதியுதவி செய்வதற்காக வருகை தந்துள்ளதாக அரசு தரப்பு தெரிவித்துள்ளது. முன்னதாக பிரான்ஸ் நாட்டு தூதுவர் பிரான்கோயிஸ் ரிச்சர் மற்றும் பிரான்ஸ் அதிகாரிகள் ஆகியோர் தமிழக எல்லைப்பகுதியில் அமைந்துள்ள கோட்ட குப்பம் பகுதியில் ஆய்வுபணியை மேற்கொண்டனர்.
பின்னர் மாநில கவர்னர் இக்பால்சிங்கை சந்தித்துபேசினர் தொடர்ந்து மாநில முதல்வரையும் சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள் மாநில அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து பாராட்டு தெரிவித்தனர்.