.

Home » » ஈ.பி.டீ.பி. பங்கேற்பு , கூட்டமைப்பை புறக்கணிப்பு - வடக்கு மாகாண அபிவிருத்தி கலந்துரையாடல்

ஈ.பி.டீ.பி. பங்கேற்பு , கூட்டமைப்பை புறக்கணிப்பு - வடக்கு மாகாண அபிவிருத்தி கலந்துரையாடல்


பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் 1000கோடி ரூபா செலவில் வடக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடலிற்கு கூட்டமைப்பினர் எவரும் அழைக்கப்படவில்லை என அக்கட்சி சார்ந்தவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேற்படித் திட்டம் தொடர்பில் தெரிவுகளை மேற்கொள்ளவென யாழ்.மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற சந்திப்பின்போது ஈ.பி.டி.பி சார்ந்த பிரதிநிதிகளே முழுவதுமாக கலந்து கொண்டதுடன், கூட்டமைப்பின் சார்பில் பார்வையாளர்களாக கூட யாரும் கலந்து கொண்டிருக்கவில்லை,
ஆளுநர், மற்றும் டக்ளஸ், யாழ்.மாநகர முதல்வர், ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர்கள், ஆகியோர் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர், ஆனால் கூட்டமைப்பின் சார்பில் பிரதேச சபை தலைவர்கள் கூட அழைக்கப்பட்டிருக்கவில்லை, மேலும் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் முளுவதுமாக வீதிக்கும், குளங்களுக்கும் என திட்டம் போடப்பட்டுள்ளது.
ஏனைய துறைகளுக்கான நிதியொதுக்கீடுகள் எவையும் செய்யப்படவில்லை, இந்த நிலையில் இந்த விடயம் தொடர்பில் கூட்டமைப்பின் முக்கியஸ்த்தர்கள் கடுமையான அதிருப்தி வெளியிட்டுள்ளதுடன், அபிவருத்திக்கான செலவு 1000கோடியிலும் குறைவாகவே இருக்கும் எனவும் குற்றம் சாட்டியுள்ளனர்.
Share this article :

சிறப்பு செய்திகள்

 
Support : Copyright © 2011. Daily News Bit - Tamil News - All Rights Reserved