ஷங்கரின் முதல் ரீமேக் படமான நண்பன் வெற்றியடைந்துள்ளது. இதுபற்றி ஷங்கர் கூறியதாவது “ இனி நான் ரீமேக் படங்கள் எடுக்க மாட்டேன். சொந்த பணத்தை தயாரிப்பில் போட்டு வீணடித்துவிட்டேன். நண்பன் படத்தை எடுப்பது சவாலாக இருந்தது. 3 Idiots படத்தின் தன்மை கெடாமல் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். விஜய் வழக்கமான நடிப்பை விட்டு விலகி புதிய விஜய்யாக நடித்தார். பாடல்கள் சிறப்பாக வந்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. நல்ல படங்களை தயாரிப்பதே என் நோக்கம். அதில் சில படங்கள் நஷ்டத்தை ஏற்படுத்தியது.
இனி படத்தை தயாரிக்கும் முன்பு எச்சரிக்கையாக இருப்பேன். நல்ல கதையம்சம் கொண்ட படத்தையே தயாரிப்பேன். ரீமேக் படங்களை இனி எடுக்கக் கூடாது என்ற முடிவிற்கு வந்துவிட்டதால் நல்ல கதையை எழுதி வருகிறேன். அநேகமாக மார்ச்சில் படப்பிடிப்பு துவங்கும்.