ஐரோப்பாவின் ஐந்து நாடுகளில் 420 தமிழீழ விடுதலைப் புலிப் பாடசாலைகள் இயங்கி வருவதாக கொழும்பு பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழ் புலம்பெயர் மக்களினால் இந்தப் பாடசாலைகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஜெர்மன், சுவிட்சர்லாந்து. பிரான்ஸ், நெதர்லாந்து மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகளில் இந்தப் பாடசாலைகள் இயங்கி வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நான்கு முதல் இருபத்து ஒன்று வயது வரையிலான 20 ஆயிரம் மாணவர்கள் இந்தப் பாடசாலைகளில் கல்வி பயில்கின்றனர் எனவும் பாடசாலை மாணவர்களிடம் அறவீடு செய்யப்படும் நிதி புலிகளின் சர்வதேச வலையமைப்பு பயன்படுத்துகின்றது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், தமிழ்ச் சோலை என்ற பெயரில் இந்தப் பாடசாலைகள் இயங்கி வருவதாக அரச புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
சிங்கள மக்களுக்கு எதிராக ஐரோப்பிய வாழ் தமிழ் சிறுவர்களை தூண்டும் வகையில் பாடங்கள் போதிக்கப்படுவதாக கொழும்பிலிருந்து வெளிவரும் திவயின செய்தி வெளியிட்டுள்ளது.