அமெரிக்க டொலர்களின் பெறுமதிக்கு, இலங்கையின் ரூபாவை 30 சதத்தால் மதிப்பிறக்கம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு வாரங்களுள், ரூபாவின் பெறுமதியை மதிப்பிறக்கம் செய்யும் மூன்றாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
ஏற்கனவே 20 சதம் என்ற அடிப்படையில் இரண்டு தடவைகள் மதிப்பிறக்கம் செய்யப்பட்டுள்ளன.
இதன்அடிப்படையில் ரூபாவின் பெறுமதி இதுவரையில் 70 சதத்தால் மதிப்பிறக்கம் செய்யப்பட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் சிறந்த பலனை பெற்றுக் கொள்வதற்காக இந்த மதிப்பிறக்கம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.