சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் வெளியிட்டுள்ள புதிய டெஸ்ட் தரவரிசை பட்டியலில் இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் குமார் சங்ககார முதலிடம் பெற்றுள்ளார்.
இதன்படி இரண்டாவது இடத்தை தென்னாபிரிக்க அணியின் ஜெக் காலிஸ் பெற்றுள்ளதுடன், முன்றாவது இடத்தை அவுஸ்ரேலிய அணியின் தலைவர் மைகல் கிளார்க் பெற்றுள்ளார்.
நான்காம், ஜந்தாம் மற்றும் ஆறாம் இடங்களில் முறையே, ஏ பி டி வில்லியஸ், யூனுஸ்கான் மற்றும் அலிஸ்டியர் குக் ஆகியோர் பெற்றுள்ளனர்.
இந்த தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கர், பாகிஸ்தான் அணி வீரர் அசார் அலியுடன் இணைந்து 10 வது இடத்தை பெற்றுள்ளார்.
இதனிடையே பந்து வீச்சு தரவரிசையின் தென்னாபிரிக்க அணியின் டேல் ஸ்டெய்ன் முதலிடத்தை பெற்றுள்ளார்.
பாகிஸ்தானின் அஜ்மல் இரண்டாம் இடத்திலும், இங்கிலாந்தின் அண்டர்சன் மூன்றாம் இடத்திலும் தரப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்திய அணியின் சகீர் கான் 10 வது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளார்.