தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளுடன் இலங்கையில் இருந்து வெளிநாட்டு சுற்றுப் பயணங்களை மேற்கொண்ட ஒருவர் கனடாவில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
எம்.சி.சன் சீ கப்பல் மூலம் கடந்த ஆண்டு 492 அகதிகளுடன் சென்றவர்களில் ஒருவரே, இவ்வாறு விடுதலைப் புலிகளின் பிரநிதிகளுடன் வெளிநாடுகளுக்கு சென்றிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் நேற்று அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அவர் இந்த குற்றச் சாட்டை முதலில் நிராகரித்துள்ளா.
எனினும் அவர் விடுதலைப் புலிகளுடன் வெளிநாடுகளுக்கு சென்றிருந்தமை தொடர்பிலான பத்திரிகை செய்தி ஆவனங்களை காண்பித்து, விசாரணை நடத்தப்பட்டது.
பின்னர், தாம் விடுதலைப் புலி பிரிதிநிதியாக செல்லவில்லை எனவும், அவர்கள் சென்ற கூட்டங்களில் ஊடக பணிக்காக சென்றதாகவும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அவரை தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானவர் என, தடுத்து வைக்குதமாறு கனேடிய எல்லைப் பாதுகாப்பு சபையின் சட்டத்தரணி ஜெனீபர் ப்ரைபர்க் கோரியுள்ளார்.
தேசிய பாதுகாப்பு தொடர்பில் தடுத்து வைக்கப்படுகின்ற எம்.வீ. சன்சீ கப்பல் முதலாவது இலங்கை அகதி இவராவார்.
ஏனைய அகதிகள் அனைவரும் அடையாளம் காணப்படாமலேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.