ஜெனீவா மனித உரிமைகள் சபையில் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை சமர்பிக்க போவதில்லை என்ற அரசாங்கத்தின் கருத்துக்கு ஐக்கிய தேசிய கட்சி கண்டனம் வெளியிட்டுள்ளது.
இறுதி போர் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் நிபுணத்துவ குழு சமர்பித்த அறிக்கையை நம்ப வேண்டாம்.இ லங்கையின் நல்லிண்ண ஆணைக்குழுவின் அறிக்கை வரையில் காத்திருங்கள் என்று ஸ்ரீலங்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அமெரிக்காவில் சென்று கூறி வந்தார்.
எனினும், நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ள நிலையில், அதனை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபையில் சமர்பிக்க போவதில்லை என்று அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், நாடு என்ற அடிப்படையில் ஜெனீவா மனித உரிமைகள் சபையில் எவ்வாறு முகம் கொடுக்கப்பேகின்றது என்று ஐக்கிய தேசிய கட்சியின் பா.உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல கேள்வி எழுப்பியுள்ளார்.
கொழும்பில் இன்று இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.