.

Home » » இலங்கை அணி வெற்றி

இலங்கை அணி வெற்றி



இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான ஒரு நாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் இலங்கை அணி 3 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஒவர்கள் நிறைவில்  6 விக்கட்டுக்களை இழந்து 280 ஒட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் பீட்டர் பொரஸ்ட் 104 ஒட்டங்களை பெற்று தமது முதலாவது சதத்தை பெற்று கொண்டார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 49.2 ஒவர்களில் 7 விக்கட்டுக்களை இழந்திருந்த போது தமது வெற்றியிலக்கை அடைந்தது.

துடுப்பாட்டத்தில் இலங்கை அணித்தலைவர் மஹேல ஜயவர்த்தன 85 ஒட்டங்களையும் தினேஷ் சந்திமால் 80 ஒட்டங்களையும் பெற்று கொடுத்தனர்.

போட்டியின் ஆட்டநாயகனாக மஹேல ஜயவர்த்தன தெரிவு செய்யப்பட்டார்.


Share this article :

சிறப்பு செய்திகள்

 
Support : Copyright © 2011. Daily News Bit - Tamil News - All Rights Reserved