.

Home » » ஈரான் மீது தாக்குதல் நடத்த தயார் நிலையில் அமெரிக்கா

ஈரான் மீது தாக்குதல் நடத்த தயார் நிலையில் அமெரிக்கா


ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடும் பட்சத்தில், தாக்குதல் நடத்த அமெரிக்க படைகள் எல்லையில் தயாராக உள்ளன. இதற்கான சிறப்பு பயிற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றது.
தன் மீதான உலக நாடுகளின் நெருக்கடி அதிகரிக்கும் பட்சத்தில் உலகின் 20 சதவீத எண்ணெய் போக்குவரத்து நடக்கும் ஹோர்முஸ் நீரிணையை மூடி விட ஈரான் முடிவு செய்துள்ளது. அது நிகழ்ந்தால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படும்.
ஹோர்முஸ் நீரிணையை மூடுவதைத் தடுப்பதற்காக அந்நாட்டை மிரட்டும் வகையில் அப்பகுதியில் அமெரிக்கா தனது தரை மற்றும் கடற்படைகளைக் குவிப்பதிலும், வியூகங்கள் வகுப்பதிலும் தீவிரம் காட்டி வருவதாக அமெரிக்காவில் இருந்து வெளியாகும் வால்ஸ்ட்ரீட் ஜர்னல் என்ற பத்திரிக்கை தகவல் வெளியிட்டுள்ளது.
இதற்காக பெர்ஷிய வளைகுடாவில் நிறுத்தப்பட்டிருக்கும் அமெரிக்கப் போர்க் கப்பல்களில் உள்ள ஆயுதங்கள் நவீனப்படுத்தப்பட்டு வருகின்றன. கரையில் உள்ள இலக்குகளைத் தாக்கும் ஏவுகணைகள், பூமிக்கு அடியில் உள்ள சுரங்கங்களைக் கண்காணிக்கும் நவீன கருவிகள் பொருத்தப்பட்டு வருகின்றன.
மேலும் ஹோர்முஸ் நீரிணையைச் சுற்றிலும் அமெரிக்க இராணுவம் தனது கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளது. அத்துடன் ஐக்கிய அரபு நாடுகளில் அமெரிக்காவின் சிறப்பு அதிரடிப் படைக் குழுக்கள் தயாராக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
ஆபத்துக்கு உதவுவதற்காக ஐக்கிய அரபு நாடுகள் மற்றும் பஹ்ரைன் படைகளுக்கு இந்த சிறப்பு குழுக்கள் பயிற்சி அளித்து வருகின்றன.
ஹோர்முஸ் நீரிணையில் ஈரானின் அதிவேக தாக்குதல் படகுகள் சுற்றி வருவதால் அவற்றைத் தாக்கும் விதத்தில், அமெரிக்க போர்க் கப்பல்களில் ஆயுதங்கள் மாற்றியமைக்கப்பட்டு வருகின்றன.
Share this article :

சிறப்பு செய்திகள்

 
Support : Copyright © 2011. Daily News Bit - Tamil News - All Rights Reserved