.

Home » » சூர்யா ஜோடியாக மீண்டும் ஸ்ருதியா

சூர்யா ஜோடியாக மீண்டும் ஸ்ருதியா

டிக்கிறாரா என்றதற்கு பதில் அளித்தார் வெங்கட்பிரபு. இதுபற்றி அவர் அளித்த பேட்டி: மங்காத்தா வெற்றியை தொடர்ந்து மீண்டும் அஜீத் படம் இயக்குகிறீர்களா என்கிறார்கள். மீண்டும் இயக்குவேன். ஆனால் அதற்கு இன்னும் நேரம் இருக்கிறது. தற்போது சூர்யா நடிக்கும் படத்தை இயக்குகிறேன். ரவி தேஜாவும் நடிக்கிறார். இருவரும் வெவ்வேறு படங்களில் நடித்து வருகின்றனர். அப்படங்களை முடித்தவுடன் என் படத்தில் நடிப்பார்கள். சமீபத்தில் அஜீத்தை சந்தித்தேன். சினிமா தவிர பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினோம். மீண்டும் அவருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று ஆசையாக இருக்கிறேன். சூர்யா நடிக்கும் படத்தின் ஸ்கிரிப்ட் முடிந்துவிட்டது. இது ஆக்ஷன் - த்ரில்லர் படம். அதே நேரம், ஹீரோக்கள் காமெடி காட்சிகளிலும் நடிக்க உள்ளனர். இப்படத்தில் முன்னணி நடிகை ஒருவர் நடிக்க உள்ளார். 7ம் அறிவு படத்துக்கு பிறகு இப்படத்திலும் சூர்யா ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடிக்கிறாரா என்கிறார்கள். அது வதந்திதான். இவ்வாறு வெங்கட்பிரபு கூறினார்.
Share this article :

சிறப்பு செய்திகள்

 
Support : Copyright © 2011. Daily News Bit - Tamil News - All Rights Reserved