.

Home » » பாண் விலை இன்று நள்ளிரவு முதல் 5 ரூபாவினால் அதிகரிப்பு

பாண் விலை இன்று நள்ளிரவு முதல் 5 ரூபாவினால் அதிகரிப்பு


நாடு முழுவதும் பாணின் விலை இன்று நள்ளிரவு முதல் ஐந்து ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் எரிபொருள் விலை ஏற்றத்தைத் தொடர்ந்து பாணின் விலையை அதிகரிப்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என ஏற்கனவே அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் கடந்த வாரம் தெரிவித்திருந்தது.
இதன்படி இன்று நள்ளிரவு முதல் பாணின் விலை ஐந்து ரூபாவினால் அதிகரிக்கப்படுவதாக சங்கம் விடுத்துள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் விலையேற்றத்தைத் தொடர்ந்து, அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் போக்குவரத்துக் கட்டணங்கள் படிப்படியாக உயர்ந்து செல்வதால் மக்கள் பாரிய நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Share this article :

சிறப்பு செய்திகள்

 
Support : Copyright © 2011. Daily News Bit - Tamil News - All Rights Reserved