மாங்குளத்திலிருந்து கொழும்பு நோக்கி வியாபாரத்திற்காக சென்ற நபரொருவர் காணாமல் போயுள்ளதாக, குறித்த நபரின் தாயாரால் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாங்குளம் ஒலுமடுவைச் சேர்ந்த தில்லைநடராசா கந்தசாமி (வயது 37) என்பவரே மேற்படி காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் 25ம் திகதி தனது வியாபார நோக்கத்திற்காக மாங்குளத்திலிருந்து வவுனியா ஊடாக கொழும்பு சென்ற குறித்த நபரிடமிருந்து இதுவரை குடும்பத்தாருடன் எதுவித தொடர்பும் மேற்கொள்ளவில்லை எனவும்,
குறித்த நபரின் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் இல்லங்களில் தேடியும் எவ்வித தொடர்பு கிடைக்காததையடுத்து மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா செயலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.