பாக்கிஸ்தானுக்கான இரண்டு நாட்கள் விஜயம் மேற்கொண்டு சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாக்கிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரியை சந்தித்து இருதரப்பு விவகாரங்கள் குறித்துகலந்துரையாடியுள்ளார்.
இஸ்லாமாபாத்திலுள்ள ஜனாதிபதி மாளிகையில் குறித்த சந்திப்பு நேற்று இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடல்கள் இடம்பெறுவதற்கு முன்பதாக பாக்கிஸ்தான் ஜனாதிபதி உத்தியோகபூர்வ இல்லத்தில் இலங்கை ஜனாதிபதிக்கு பாக்கிஸ்தான் ராணுவம் அணிவகுப்பு மரியாதை அணிவகுப்பை நிகழ்த்தியது.
கடந்த 3 தசாப்த கால யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வருவதற்கு பங்களிப்பு செலுத்திய பாக்கிஸ்தான் அரசாங்கத்திற்கும், மக்களுக்கும் இலங்கை ஜனாதிபதி நன்றிகளை தெரிவித்துள்ளார்.
அதேவேளை, சீனி உற்பத்தி, மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்கான பாக்கிஸ்தான் பயன்படுத்தும் தொழினுட்பங்களை வழங்க முடியும் என பாக்கிஸ்தான் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, வீதி அபிவிருத்தி உள்ளிட்ட மேலும் சில மேம்பாட்டு நடவடிக்கைகள் தொடர்பான சில உடன்படிக்கைகளும் இருதரப்பிற்கும் இடையில் கைச்சாத்தாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.