இங்கிலாந்து இளவரசர் வில்லியம் அவரது மனைவி கேத் மிடில்டன் பயணித்த விமானம் விபத்தில் இருந்து நூலிழையில் தப்பி பிழைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
விமானம் தரையிறங்கும் போது ஏற்கனவே ஓடுதளத்திலிருந்த விமானம் அங்கிருந்து அப்புறப்படுத்தாமல் இருந்ததால், அந்த விமானத்தின் மீது இளவரசர் பயணம் செய்த விமானம் மோத இருந்தது.
விமானம் தரையிறங்கும் போது 200 அடி உயரத்தில் எதிரே மற்றொரு விமானம் இருந்ததை கவனித்த விமானி உடனடியாக விமானத்தை மீண்டும் மேலே பறந்தார்.
பின்னர் ஒரு சில நிமிடங்கள் விமான நிலையத்தை சுற்றி சுற்றி வந்தது. ஓடுதளத்திலிருந்த அந்த விமானம் அப்புறப்படுத்தப்பட்ட பின்னர் இளவரசர் பயணம் செய்த விமானம் தரை இறக்கப்பட்டது.


