இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்துள்ள அமெரிக்காவின் தெற்காசிய பிராந்திய பிரதி ராஜாங்க செயலாளர் ரொர்பட் ஓ பிளக் மற்றும் மனித உரிமைகள் பிரதிநிதி மாரிய ஒட்டேரோ ஆகியோர், இன்று மாலை ஊடகவியலாளர் சந்திப்பொன்றை மேற்கொண்டனர்
அரசாங்கத்திற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் இடையே தற்போது இடம்பெற்று வரும் இனப்பிரச்சனை தொடர்பான பேச்சு வார்த்தைகளுக்கு அமெரிக்கா முழு ஆதரவினையும் வழங்குகின்றது.
நாம் அறிந்த வரையில், இந்த பேச்சு வார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதனை உணர்கிறோம்.
இந்த நிலையில் இரு தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயங்களை நாடாளுமன்ற தெரிவுக் குழுவிற்கு சமர்ப்பிக்கலாம்.
இதேவேளை, எதிர்வரும் மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையகத்தில் சமர்ப்பிக்க தீர்மானித்துள்ள பிரேரணை திட்டமிட்டபடி முன்னெடுக்கப்படும் என அமெரிக்க ராஜாங்க மனிதவுரிமைகளின் உதவி செயலாளர் மாரியொ ஒட்டேரோ தெரிவித்துள்ளார்.