தமது ஆட்சியை சிறிய பொலிஸ் குழுவே கைப்பற்றியதாக தெரிவித்துள்ள மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட், தமக்கும் தமது குடும்பத்துக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
வெளிப்படுத்தப்படாத இடம் ஒன்றில் இருந்து இந்திய தொலைக்காட்சி ஒன்றுக்கு தகவல் அளித்த போதே அவர் தமது சர்வதேச உதவி தேவைப்படுவதாக குறிப்பிட்டார்.
மாலைதீவின் உயர் நீதிபதி ஒருவர் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் பின்னர் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் காரணமாக நஷீட் கடந்த வாரம் பதவி விலகினார்.
இதனையடுத்து அவர் தற்போது யாருக்கும் தெரியாத இடம் ஒன்றில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அவரின் மனைவி உட்பட்ட குடும்பத்தினர் இலங்கையில் தஞ்சம் கோரியுள்ளனர்.
இந்தநிலையில் நஷீட்டை கைதுசெய்யுமாறு மாலைதீவின் நீதிமன்றம் நேற்று பிடியாணையை பிறப்பித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.