.

Home » » மட்டக்களப்பு சரஸ்வதி சிலை விரவகாரம் ஒரு அரசியல் நடவடிக்கையே – அருட் திரு டெரன்ஸ் அடிகளார்

மட்டக்களப்பு சரஸ்வதி சிலை விரவகாரம் ஒரு அரசியல் நடவடிக்கையே – அருட் திரு டெரன்ஸ் அடிகளார்


மட்டக்களப்பு புனித வின்சனட் மகளீர் பாடசாலையில் தற்பொழுது ஏற்பட்டுள்ள சரஸ்வதி சிலை விவகாரம் முற்று முழுதான ஒரு அரசியல் நடவடிக்கையே என்று மட்டக்களப்பு மெதடிஸ்த திருச்சபையின் அருட் போதகர் அருட் திரு டெரன்ஸ் அடிகளார் தெரிவித்துள்ளார்.
குறுகிய அரசியல் இலாபங்களுக்காக மதங்களுகிடையே பிரிவினையை ஏற்படுத்தி அதில் அரசியல் நடாத்த முயலும் சிலரமு நடவடிக்கையின் விளைவுதான் இந்த சிலை விவகாரம் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக அவர்; வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்
கடல்கடந்து 6000 மைல்கள்; தூரம்; கஷ்;டப்பட்டு பிரயாணம் செய்து தியாக சிந்தையோடு வந்த மெதடிஸ்த்த மிஷனரிகளால் ஆரம்பிக்கப்பட்ட மட்டக்களப்பு புனித வின்சன்ற் மகளீர் தேசிய உயர்தரப்பாடசாலை 192 வருடம் பழமை வாய்ந்தது என்பதைக் குறிப்பிட விரும்புகிறோம்.
மட்டக்களப்பு மாவட்ட பெண்கள் வளர்ச்சி கருதி அவர்களும் சமுகத்தில் தலைநிமிர்ந்து நிற்க வேண்டும் என்பதை நோக்காகக் கொண்ட கிறிஸ்தவ மிஷனரிமார்கள் இனம் மதம் சாராது கல்விப்பணியிலே மிக மும்முரமாக ஈடுபட்டு மட்டக்களப்பு சமுதாயத்தின் உயரிய நிலைக்கு வித்திட்டனர். இன்று இந்தப் பாடசாலை கிழக்கு மாகாணத்திலே தலைநிமிர்ந்த பாடசாலையாகத் திகழ்வது பெருமைக்குரிய விடயமாகும்.
மெதடிஸ்த மிஷனறியால் நடத்தப்பட்டுவந்த இந்தப் பாடசாலை 1961 ம் ஆண்டு அரசிடம் ஒப்படைக்கப்பட்ட போதும் சில முக்கியமான நிபந்தனைகளுடன்தான் பாடசாலை கையளிக்கப்பட்டது. கிறிஸ்தவ அடையாளங்கள் கிறிஸ்த மானவர்களின் எதிர்காலம் மெதடிஸ்த திருச்சபையின் தொடர்ச்சியான கண்காணிப்பு இப்படி பல நிபந்தனைகளுடன்தான் இந்த கையளிப்பு இடம்பெற்றிருந்தது.
அன்று தொடக்கம் கடந்த 21ம் திகதி வரைக்குமான காலப்பகுதிகளில்; பாரம்பரியங்கள் மற்றும் ஒழுங்கு முறைகள் பேணப்பட்டு நல்ல ஆரோக்கியமான சூழ்நிலையிலேயே பாடசாலை வளர்ச்சி அடைந்து வந்தது என்பது மேன்மைக்குரியதும் பாராட்டடுதற்குரியதுமான விடயமாகும். ஆனால் கடந்த 22.02.2012 திகதி நடைபெற்ற ஒரு சம்பவமே மட்டக்களப்பு சமூகத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
சரஸ்வதி சிலை அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெறுவதை 22.02.2012 அன்று காலை அறிந்ததுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு எமது கருத்துக்களையும் சிலை அமைப்பதால் நிகழப்போகும் ஏற்படக்கூடியதான எதிர் விளைவுகளையும் பாடசாலை நிர்வாகத்திடம் தெரிவித்தோம்.
ஒரு பாரம்பரி கிறிஸ்தவ பாடசாலையில் அரசியல் நோக்கத்திற்காக மேற்கொள்ளப்படும் இதுபோன்ற நடவடிக்கைகள் எவ்வாறு கிறிஸ்தவர்களின் மனங்களில் காயத்தை ஏற்படுத்தும் என்பதையும் பணிவாகத் தெரிவித்திருந்தோம். அத்தோடு இதுசம்பந்தப்பட்ட அனைத்து அரச அலுவலகங்களிலும் இதற்கான அனுமதி பெறப்பட்டனவா என வினவினபோது கல்வித்திணைக்களத்தின் பொறியியலாளர் இதற்கு தாம் அனுமதி வழங்கவில்லை எனக்கூறினார்.
அதிபரின் உடந்தையுடன்; ஒருசிலரின் தூண்டுதலினாலும்தான் இந்நடைவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதன்பின் 22.02.2012 மாலை திருச்சபையாரும் பழைய மாணவர்களும் ஆசிரியர்கள் சிலரும் சமூக நலன்விரும்பிகளும் பாடசாலைக்கு வருகைதந்த கிழக்கு மாகாண முதலமைச்சரின் கவனத்துக்கு இதனை கொண்டுவந்தனர்.
முதலமைச்சர் சிலைநிறுவும் நடவடிக்கைகளை உடனடியாக கைவிடும்படியும் மண்டப திறப்புவிழா முடிவடைந்த பின்பு அனைத்து தரப்பினரும் கூடி கலந்தாலோசித்து இறுதித்தீர்மானத்துக்கு வருவோம் என ஆலோசனை கூறினார்.
முதலமைச்சரின் இவ்வறிவுறுத்தலையும் மீறி சிலரின் தூண்டுதலால்; 23.02.2012 அதிகாலை 00:10 அளவில் சிலை வைக்கப்பட்டது. இதனை அறிந்த நாம் மட்டக்களப்பு பிரதிப் பொலீஸ் அத்தியட்சகர் அவர்களிக் கவனத்துக்கு அதிகாலை 01:00 மணிக்கு கொண்டுவந்தோம். இச்சிலையை 23.02.2012 காலை 06:00 மணிக்கு முன்பு தாம் அகற்றுவதாக உறுதியளித்தார். இதன்பிரகாரம் நள்ளிரவில் இரகசியமாக வைக்கப்பட்ட சிலை 09 மணித்தியால இடைவெளியில் பொலீசாரின் மேற்பார்வையில் அன்றைய தினம் நடைபெறவிருந்த கட்டட திறப்பு விழா ஆரோக்கியமான முறையில் நடைபெற வேண்டும் என்பதற்க்காக அகற்றப்பட்டதே தவிர உடைத்து எறியப்படவில்லை.
இச்சிலை வைப்பிற்கு அனைத்து மாணவர்களினதும் அனைத்து ஆசிரியர்களினதும் அனைத்து பழைய மாணவர்களினதும் முழு சம்மதம் பெறப்படவில்லை. அத்தோடு அனைத்து உயரதிகாரிகளின் உத்தரவுக்கு மீறியே இச்சிலை மிகவும் கள்ளத்தனமாகவும் சட்ட விரோதமாகவும் இரகசியமாகவும் பாடசலையின் வாயில்கள் அனைத்தும் பூட்டப்பட்ட நிலையில் ஒருசிலரின் பிரசன்னத்தின் மத்தியில் வைத்தமைக்கான காரணம் என்ன? ஒரு சிலரின் சுய இலாபத்திற்காக ஏற்படுத்தப்பட்ட இச் செயற்பாடானது இன்று மாணவர்கள் ஆசிரியர்கள் சமூக மட்டத்தில் ஆரோக்கியமற்ற புறச்சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.
அரசிடம் பாடசாலைகள் கையளிக்கும் போது மேற் கொள்ளப்பட்ட ஒப்பந்தம் பற்றிய சரியான விளக்கமும் தெளிவும் தற்போதைய தலைமுறையினருக்கு இல்லை அணைத்து கிழக்கு மக்களும் கல்வி ஒளியை காண வேண்டும் அவர்களும் சமூகத்தில் நல்ல பிரஜையாக வரவேண்டும் என பல கிறிஸ்தவ மிஷனரி மார்கள் தமது சொந்த நாட்டை விட்டு உறவுகளை துறந்து தமது உயிரையும் தியாகம் செய்து இரத்தம் சிந்தி கண்ணீர் சிந்தி பாடுகள் பட்டு கட்டிய மி~ன் பாடசாலைகளுக்கு தமிழ் பேசும் சமூகம் கொடுக்கும் மரியாதையும் நன்றி கடனும் இதுதானா?
இச் சிலைவைப்பு சம்பவத்தை குறிப்பிட்ட ஒரு அரசியல்வாதி தனது சுய அரசியலாக மாற்றுவதை தமிழ் சமூகம் அங்கிகரிக்கின்றதா. ஊடகங்கள் ஊடாக சமூகத்துக்கு பிழையான திரிபு படுத்திய ஊறுதி படுத்தப்படாத ஒரு பக்க சார்பான செய்தியை வழங்குவதை நாம் கண்டிக்கின்றோம். இந்த செய்தி ஊடக அறிக்கைகள் மட்டக்களப்பு சமூகத்திலே பல ஆரோக்கியமற்ற புற சூழ் நிலையை உருவாக்கியுள்ளது.
இச் சம்பவம் சம்பந்தமாக ஒருவரின் கண்டன அறிக்கையை வெளியிடும் ஊடகங்கள் வின்சன்ட் பாடசாலையில் இருந்து 100 மீட்டர் அன்மையில் உள்ள மெடிஸ்த திருச்சபையின் கருத்தையும் கேட்காது ஒருவரின் செய்தியை வெளியிட்டது வேதனைக்குரியது.
பலகாலமாக இருந்து வந்த சிலை என கூறும் அந்தக் குறிப்பிட்ட அரசியல்வாதி தனது சீவிய காலத்தில் ஒரு தடைவ எனும் அப் பாடசாலைக்கு சமூகம் அளிக்கவில்லையென்றே தோன்றுகிறது. காரணம் கடந்த 192 வருட வரலாற்றில் 23.02.2012 அன்று நள்ளிரவு 00.10 மணிக்கு முன்பு பாடசாலையில் அப்படிப்பட்ட சிலை இருக்கணேயில்லை என்பது மட்டக்களப்பு வாழ் அனைத்து மக்களுக்கும் தெரிந்த உண்மை.
இன்நிகழ்வால் ஏற்பட்டுள்ள இறுக்கமான பிரிவினையான வேதனையான சூழ்நிலை மாற வேண்டும் என நாங்கள் பிராத்திக்கிறோம். சமூகத்தில் இயல்பு நிலை ஏற்பட வேண்டும் எமது முழு எண்ணமும் பிராத்தனையும்மாகும்.
Share this article :

சிறப்பு செய்திகள்

 
Support : Copyright © 2011. Daily News Bit - Tamil News - All Rights Reserved