.

Home » » கனடா, ரொறன்ரோவில் வாகனக் காப்புறுதி மோசடி!- தமிழில் அறிவிப்பு விடுத்த பொலிசார்!

கனடா, ரொறன்ரோவில் வாகனக் காப்புறுதி மோசடி!- தமிழில் அறிவிப்பு விடுத்த பொலிசார்!


ரொறன்றோவில் வேண்டுமென்றே ஏற்படுத்தப்பட்ட வாகன விபத்துக்களின் மூலம் பெருந்தொகையீட்டியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட 37 தமிழர்களை கைது செய்த ரொறன்ரோப் பொலிசார் இது குறித்து மக்களுக்கு தமிழ்மொழி மூலம் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளனர்.
இந்த விபத்து மோசடியில் ஈடுபடுத்தப்பட்ட தமிழர்களில் பலர் ஆங்கிலப்புலமை அற்றவர்களாக இருப்பது அறியப்பட்டுள்ளதாகவும் இந்த விபத்தைக் காரணம் காட்டி சிகிச்சைகளிற்கெனப் பணம் பெற்ற எட்டு நிறுவனங்களை நடத்திய தமிழர்களும் கைது செய்யப்பட்டவர்களில் அடங்குவர்.ஸ்டேட் பார்ம் என்ற காப்புறுதி நிறுவனத்தை குறிவைத்து நடத்தப்பட்ட மோசடியே இவ்வாறு பொலிசாரினால் முறியடிக்கப்பட்டுள்ளது.
இதன் போது மேற்படி சிகிச்சை நிறுவனங்களில் பணிபுரியாத அந்த சிகிச்சை நிறுவனங்களிற்கு சம்பந்தமில்லாத அல்லது அந்த நிறுவனங்களிலிருந்து விலகிய மருத்துவ நிபுணர்களின் பெயர்கள் இந்த மோசடியில் பயன்படுத்துப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட 37 பேரும் தமிழர்கள் என்ற காரணத்தால் தமிழ்ச் சமுதாயம் குறிப்பாக ஆங்கில மொழிப் புலமையற்றவர்கள் இந்த மாதிரியான மோசடிகளிற்கு உள்ளாகிறார்கள் என்பது கண்டறியப்பட்டதனால் ரொறன்ரோ பொலிஸில் பணிபுரியும் தமிழரான கஜமுகநாதன் கதிரவேலு என்பவர் மூலம் தமிழில் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
அவ்வறிவித்தலில் பொலிஸ் அதிகாரியான கஜமுகநாதன், இவ்வாறான செயல்கள் எங்கள் சமுதாயத்திலுள்ள சிலரே எங்கள் சமுதாயத்தைச் சார்ந்த பலரையும் இந்த விவகாரத்தில் பயன்படுத்தியுள்ளனர் எனவும் இவ்வாறான செயல்கள் பற்றித் தகவல் தெரிந்தால் தன்னுடன்            416-808-1906 begin_of_the_skype_highlighting            416-808-1906      end_of_the_skype_highlighting       என்ற தொலைபேசி இலக்கத்தில் அழைத்துத் தன்னுடன் தொடர்பு கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.
Share this article :

சிறப்பு செய்திகள்

 
Support : Copyright © 2011. Daily News Bit - Tamil News - All Rights Reserved