இந்தியாவின் முன்னணி நட்சத்திர துடுப்பாட்டக்காரர் சச்சின் டெண்டுல்கர் தனது நூறாவது சதத்தை நிறைவு செய்தார்.
ஆசிய கிண்ண கிரிக்கட் போட்டியின் வங்கதேசத்துக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் பல கடும் விமர்சனங்களுக்கு அடுத்து இந்த சாதனையை எடுத்துள்ளார்.
கடந்த 33 இன்னிங்ஸ்களாக சதம் அடிக்கும் முயற்சியில் தோற்று வந்த சச்சின் இன்று தனது முயற்சியின் பயனாக வங்கதேசத்துக்கு எதிராக 100வது சதத்தை நிறைவு செய்தார்.