மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கூழாவடி பிரதேசத்தில் இன்று அதிகாலை 5:20 மணியளவில் விஞ்ஞான ஆசிரியர் ஒருவர் ரயிலில் மோதி தற்கொலை செய்துள்ளார்.
கொழும்பிலிருந்து மட்டக்களப்பு வந்து கொண்டிருந்த ரயில் வண்டியில் மோதி, நடராஜா ராஜு (45) என்பவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அம்பாறை மாவட்டத்தின் தம்பிலுவில் அரசடி பிரதேசத்தைச் சோர்ந்த இவர் மட்டக்களப்பு பாடசாலை ஒன்றில் கல்வி கற்பித்து வருகிறார்.
நான்கு பிள்ளளைகளின் தந்தையான இவரது மரணம் தொடர்பான விசாரணையை, திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.வி.பெர்ணான்டோ மேற்கொண்டார்.
இத்தற்கொலை தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு சிறுகுற்றப்பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி ஐ.பி.ஜயரத்ன தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்கொளகின்றனர்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.