.

Home » » உயிரணுக்களை தானம் செய்ததன் மூலம் 600 குழந்தைக்கு தந்தையான விஞ்ஞானி

உயிரணுக்களை தானம் செய்ததன் மூலம் 600 குழந்தைக்கு தந்தையான விஞ்ஞானி


இன்றைய காலகட்டத்தில் உயிரணு தானம் மூலம் பெண்கள் குழந்தைகளை பெற்றுக் கொள்கின்றனர்.
கடந்த 1940ம் ஆண்டில் இருந்தே இந்த முறை வழக்கத்தில் இருந்துள்ளது. இவ்வாறு குழந்தை பெறுபவர்கள் மற்றும் உயிரணு தானம் வழங்கியவர்கள் பெயர்கள் ரகசியமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் விஞ்ஞானி ஒருவருக்கு உயிரணு தானம் மூலம் 600 குழந்தைகள் பிறந்துள்ள தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அவரது பெயர் பெர்டோல்டு வியஸ்னர்.

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இவர் லண்டனில் சொந்தமாக கருத்தரித்தல் மைய மருத்துவமனை ஒன்றை நடத்தி வந்தார்.

இந்த மையத்தில் உயிரணு தானம் வழங்கியதன் மூலம் 1500 குழந்தைகள் பிறந்துள்ளன. அவற்றுள் 600-க்கும் மேற்பட்ட குழந்தைகள் விஞ்ஞானி வியஸ்னர் உயிரணுவின் மூலம் பிறந்தவை என தெரியவந்துள்ளது.

இவர்களில் இரட்டையர்களும் அடங்குவர். கனடாவை சேர்ந்த டாக்குமெண்டரி சினிமா தயாரிப்பாளர் பார்ரி ஸ்டீவன், லண்டன் வக்கீல் டேவிட் கோலன்ஸ் இது குறித்து ஆய்வு நடத்தி இந்த ரகசியத்தை கண்டுபிடித்தனர்.

விஞ்ஞானி வியஸ்னர் ஆண்டுக்கு 20 முறை உயிரணு தானம் செய்துள்ளார். கடந்த 1940ம் ஆண்டு முதல் 1960ம் ஆண்டு வரை அதாவது 20 ஆண்டுகள் தானம் செய்து இருக்கிறார். இவர் தற்போது உயிருடன் இல்லை, கடந்த 1972-ம் ஆண்டு இறந்துவிட்டார்.

அமெரிக்காவை சேர்ந்த ஒருவரின் உயிரணு தானம் மூலம் 150 குழந்தைகள் பிறந்துள்ளன. அதுவே உலக அளவில் அதிக அளவாக கருதப்பட்டது. அந்த சாதனையை விஞ்ஞானி வியஸ்னர் முறியடித் துள்ளார்.

மேலும் இதே கருத்தரித்தல் மையத்தில் இவருக்கு அடுத்த படியாக மற்றொருவர் அதிகம் பேருக்கு உயிரணு தானம் செய்துள்ளார். ஆனால் அவரது பெயர் வெளியிடப்படவில்லை.
Share this article :

சிறப்பு செய்திகள்

 
Support : Copyright © 2011. Daily News Bit - Tamil News - All Rights Reserved