வடகொரியாவின் கண்காணிப்பு செயற்கைகோள், விண்ணில் செலுத்துவதற்கு தயார்நிலையில் ஏவுதளத்தில் வைக்கப்பட்டுள்ளது.
வடகொரியா ஏவுகணை சோதனையை நடத்தி வருகிறது என பல்வேறு நாடுகளும் குற்றம்சுமத்தி வரும் வேளையில், வெளிநாட்டு பத்திரிக்கையாளர்களை அழைத்து செயற்கைகோளை காண்பித்து நேரில் விளக்கம் அளித்துள்ளது.
இந்த செயற்கைகோளை வடகொரியா வரும் 12ம் திகதி முதல் 16ம் திகதிக்குள் எந்நேரத்திலும் விண்ணில் செலுத்தலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
வானிலை குறித்த ஆய்வுகளுக்காகவும், இயற்கை வளங்கள் குறித்த தகவலை சேகரிப்பதற்காகவும் இந்த செயற்கைகோளை விண்ணில் செலுத்த உள்ளதாக வடகொரியா தெரிவித்துள்ளது.
மேலும் செயற்கைகோளை எந்த நாடாவது சுட்டு வீழ்த்தினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.