.

Home » » போரினால் ஏற்பட்ட காயங்களை ஆற்ற கிடைத்த சந்தர்ப்பம் கைநழுவக் கூடும்: சந்திரிக்கா

போரினால் ஏற்பட்ட காயங்களை ஆற்ற கிடைத்த சந்தர்ப்பம் கைநழுவக் கூடும்: சந்திரிக்கா


போரினால் ஏற்பட்ட காயங்களை ஆற்றக் கிடைத்த சந்தர்ப்பம் கைநழுவிப் போகக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
போரின் பின்னரான இலங்கையில் உரிய முனைப்புடன் நல்லிணக்கப் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை.

இந்த அரசாங்கம் இன சமூகங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை சரியாக செய்யத் தவறியுள்ளது.

இவ்வாறான வாய்ப்புக்கள் நீண்ட காலத்திற்கு நிலைத்திருக்காது.

போரின் பின்னர் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும் அது போதுமானதல்ல.

குறிப்பாக போர் வலயங்களில் பௌதீக ரீதியான புனரமைப்பு மற்றும் மறுவாழ்வு அளித்தல் ஆகிய நடவடிக்கைகள் திருப்தி அளிக்கும வகையில் அமையவில்லை.

தமிழ் மக்களில் பெரும்பான்மையானவர்கள் உரிமைகளை வேண்டி நிற்பதாகவும் சிறியளவிலான தமிழ் தரப்பினர் ஈழத்தை வேண்டுவதாகவும் சந்திரிக்கா குறிப்பிட்டுள்ளார்.

இதனை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

புது டெல்லியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
Share this article :

சிறப்பு செய்திகள்

 
Support : Copyright © 2011. Daily News Bit - Tamil News - All Rights Reserved