.

Home » » தலை துண்டித்து கொல்லப்பட்டதன் எதிரொலி: வங்கதேசத்தில் சவுதி தூதர் சுட்டுக் கொலை

தலை துண்டித்து கொல்லப்பட்டதன் எதிரொலி: வங்கதேசத்தில் சவுதி தூதர் சுட்டுக் கொலை


வங்கதேசத்தில் சவுதி அரேபியா தூதர் காலிஃப் அல் அலி(Khalaf al-Ali) மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
சவுதி அரேபியா தூதர் காலிப் அல் அலி என்பவர் நேற்று தனது வீட்டிலிருந்து மாலை நடைபயிற்சிக்காக சென்றுள்ளார்.
வீட்டிலிருந்து சில அடி தூரம் சென்ற போது எதிரே காரில் வந்த ஒருவன் துப்பாக்கியால் தூதரை சுட்டுவிட்டு தப்பியோடி விட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.
குண்டுகாயமடைந்த தூதரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் முன்பே இறந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவி்த்தனர். பொலிசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூதர் கொலை செய்யப்பட்டது குறித்து பொலிசார் கூறுகையி்ல், கடந்தாண்டு அக்டோபர் மாதம் சவுதியில், 8 வங்கதேசத்தினர், கொலை, கொள்ளை வழக்கில் தலை துண்டித்து கொல்லப்பட்டனர். அதற்கு பழிவாங்கவே தூதரை கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கிறோம் என்றனர்.
சவுதி தூதர் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு வளைகுடா நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ன. வங்கதேச நாட்டிற்கு சவுதி அரேபியா பலவழிகளில் பெருமளவு நிதி அளித்து வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
Share this article :

சிறப்பு செய்திகள்

 
Support : Copyright © 2011. Daily News Bit - Tamil News - All Rights Reserved