பிரேசில் உலகின் ஆறாவது பணக்கார நாடு என்ற தகுதியை அடைந்துள்ளதால், அந்நாட்டிற்கு வழங்கும் உதவிகளை நிறுத்திவிட பிரிட்டன் முடிவு செய்துள்ளது.
சாம்பா நடனத்துக்கும், கால்பந்தாட்டப் போட்டிகளுக்கும் பெயர் பெற்ற பிரேசில் நாட்டின் பொருளாதாரம் 2011ம் ஆண்டில் 1.57 டிரில்லியன் பவுண்டாகும். இது பிரிட்டனின் பொருளாதாரத்தை விட 32 பில்லியன் பவுண்டு கூடுதலாகும்.
நிபுணர்கள் பிரேசிலின் பொருளாதார வளர்ச்சி கண்டு ஆச்சரியமடைகின்றனர். அதே சமயம் விமர்சகர்கள், பிரிட்டனின் பொருளாதாரம் நலிந்து போனதற்குக் காரணம் அந்த நாடு மற்ற நாடுகளுக்கு அளித்து வந்த தகுதிக்கு மீறிய உதவிகளேயாகும் என்றனர்.
பிரிட்டன் நாடு கடந்த 1989ம் ஆண்டு முதல் பிரேசிலுக்கு 14 மில்லியன் பவுண்டு உதவிகளை வழங்கி வருகின்றது. கடைசியாக 98,000 பவுண்டு பயிர் மேம்பாட்டிற்காக வழங்கியது.
பிரேசிலின் மக்கள்தொகை 194 மில்லியன், அதாவது பிரிட்டனை விட மூன்று மடங்கு அதிகமாகும். அதே போன்று பிரேசிலின் பொருளாதாரமும் பிரிட்டனை விட மூன்று மடங்கு அதிக வளர்ச்சியை அடைந்துள்ளது.
பொருளாதாரம் மற்றும் வர்த்தக ஆய்வு மையத்தின் தலைவர் ஓலென்பெர்க் கூறுகையில், நாம் ஐரோப்பிய நாடுகளில் மிகவும் முக்கியமான நபராக இருந்து வருகிறோம். ஆனால் உலக நாடுகளின் மத்தியில் குறிப்பாக பிரேசில் போன்ற நாடுகளோடு ஒப்பிடும் போதும் முக்கியமான நாடாக இருக்க வேண்டும் என்றார்.