பிரான்சில் வெளிநாட்டவர்கள் மிக அதிகமான எண்ணிக்கையில் இருப்பதால், அவர்கள் அனுபவித்து வரும் பயன்களை நீக்கி விடப் போவதாக ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோசி தெரிவித்துள்ளார்.
ஊடகத்திற்கு ஜனாதிபதி சர்கோசி அளித்த பேட்டியில் கூறுகையில், பிரான்சில் வெளிநாட்டவர்கள் மிக அதிகமான எண்ணிக்கையில் இருப்பதாகவும், அவர்களை ஒருங்கிணைக்கும் முறை மிக மிக மோசமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், புலம் பெயர்ந்தோர் பிரான்சுக்கு ஒரு வரம் என்றாலும் அவர்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைப்பது மிகவும் அவசியமாகும் என்றார்.
சர்கோசியின் தந்தை ஹங்கேரியிலிருந்து புலம் பெயர்ந்து பிரான்சுக்கு வந்தவர் தான். இருந்த போதும் இவர் பத்தாண்டுகளுக்கு மேலாக அரசுப் பயன்களை அனுபவித்து வரும் புலம் பெயர்ந்தோருக்கு அவற்றை நீக்கி விடத் தீர்மானித்துள்ளார்.
இந்நிலையில் அடுத்த மாதம் நடைபெறப் போகும் ஜனாதிபதி தேர்தலில் சர்கோசியை விட சோசலிசக் கட்சியின் வேட்பாளரான பிராங்கோய்ஸ் ஹோலாண்டேக்கு மக்கள் ஆதரவு பெருகி வருகிறது என்று கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.