.

Home » » சன் சீ கப்பலில் அகதிகளை சட்டவிரோதமாக அனுப்பியவரை கனடா உறுதி செய்தது - பிரான்சில் கைது

சன் சீ கப்பலில் அகதிகளை சட்டவிரோதமாக அனுப்பியவரை கனடா உறுதி செய்தது - பிரான்சில் கைது


‘சன் சீ‘ கப்பலில் 492 தமிழர்களை அகதிகளாக கனடாவுக்கு சட்டவிரோதமாக அனுப்பி வைத்தாக, பிரான்சில் கைது செய்யப்பட்ட தமிழர் ஒருவரே குற்றவாளி  என கனேடிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
தயாகரன் மார்க்கண்டு என்பவரே கனடாவில் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படவுள்ளார்.

இவர் அண்மையில் பிரான்சில் நடத்தப்தப்பட்ட தேடுதல் ஒன்றின் போது கைது செய்யப்பட்டார்.

இவருக்கு எதிராக கனேடிய சமஸ்டி காவல்துறை, கடந்தமாதம் அனைத்துலக பிடியாணையை பிறப்பித்துள்ளது.

தயாகரன் மார்க்கண்டு தற்போது பிரான்சில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்றும், அவரை கனடாவிடம் ஒப்படைக்கச் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், கனடாவின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைசர் விக் ரொவ்ஸ் மற்றும் குடிவரவு அமைச்சர் ஜாசென் கென்னி ஆகியோர் இணைந்து வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறியுள்ளனர்.
Share this article :

சிறப்பு செய்திகள்

 
Support : Copyright © 2011. Daily News Bit - Tamil News - All Rights Reserved