இந்தியத் திரையுலக நடிகை ஸ்ரேயா, சினிமாவில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் சமூக சேவை பணிகளிலும் ஆர்வம் உள்ளவர்.
விளம்பரம் ஏதும் இல்லாமல் ஏழைகளுக்கு உதவி வருகிறார். அத்துடன் ஆசிரமங்களுக்கு சென்று தியானம், யோகா போன்றவற்றில் ஈடுபடுகிறார்.
இந்நிலையில் விலை மாதுக்களின் வாழ்க்கை போராட்டங்கள் ஸ்ரேயாவை மிகவும் கலங்கடித்துள்ளது.
வறுமையால் விபசாரத்தில் ஈடுபடும் பெண்கள் மற்றும் சினிமா ஆசையால் இத்தொழிலில் தள்ளப்படும் பெண்கள், ஏழ்மையை பயன்படுத்தி வேலை வாங்கி தருவதாக கடத்தி போய் விபசாரத்தில் தள்ளப்படும் பெண்கள் போன்றோரின் நிலையை கண்டு வருந்தி அவர்களுக்கு உதவுவதற்காக புதிய அமைப்பை தொடங்க ஸ்ரேயா முடிவு செய்துள்ளார்.
விலைமாதுகளுக்கு மறுவாழ்வு அளிப்பது, வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தி கொடுப்பது, திருமணம் செய்து வைப்பது, குழந்தைகளை படிக்க வைப்பது போன்ற பணிகளை இந்த அமைப்பு மூலம் செய்யவும் திட்டமிட்டு உள்ளார். விரைவில் இதனை வெளிப்படையாக அறிவிக்க உள்ளார்.