.

Home » » ஜெனிவாவில் விடுதலைப் புலிகளைப் பார்த்துட்டேன்...: புலம்புகிறார் இலங்கை அமைச்சர்

ஜெனிவாவில் விடுதலைப் புலிகளைப் பார்த்துட்டேன்...: புலம்புகிறார் இலங்கை அமைச்சர்


கிண்ணியா: ஜெனிவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தின்போது உயிர்ப்போடு உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளை தாம் பார்த்ததாக இலங்கையின் கைத்தொழில் வர்த்தக துறை அமைச்சர் ரிச்சார்ட் பது யுதீன் புலம்பியுள்ளார்.

இலங்கையின் கிண்ணியா என்ற இடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பதுயுதீன் பேசியதாவது:

ஜெனீவா மனித உரிமைப் பேரவையில் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் சகோதரர்கள் வந்து அவர்களின் போராட்டங்களின் நியாயங்களையும் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய உரிமைகள் தொடர்பாகவும் கருத்துக்களை முன் வைத்தனர். அந்த மாநாட்டில் பல மொழிகளைப் பேசுகின்ற தமிழ் சகோதரர்களைப் பார்த்தோம்..

விடுதலைப் புலிகள்

தமிழ் ஈழத்துக்காக போராடியது விடுதலைப்புலிகள் இயக்கம். இந்தியா மூலம் உருவாக்கப்பட்ட வடகிழக்கு மாகாண இணைப்பு விவாகரம் பின்னடவை சந்தித்தது. இப்போது அமெரிக்கா உட்பட் மேற்குலக நாடுகள் தமிழர்களுக்கு ஏதாவது செய்தாக வேண்டும் என்று முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இலங்கைத் தமிழர் விவகாரம் இன்று சர்வதேச விவகாரமாகிவிட்டது. இலங்கைத் தமிழர்களுக்கு நிரந்தரமான அரசியல் தீர்வை உருவாக்க வேண்டும் என்று சர்வதேச நாடுகள் வலியுறுத்தும் வகையில் இலங்கைத் தமிழர் பிரச்சனை விஸ்வரூபமெடுத்திருக்கிறது.

ஒரு இனத்தின் உரிமை போராட்டம் அழிந்தேபோனாலும் அவர்களின் இழப்புக்களும் தியாகங்களும் நிச்சயமாக எதிர்காலத்தில் ஒரு தீர்வைப் பெற்றுக் கொடுக்கும் என்பதே உண்மை.

விடுதலைப்புலிகளின் போராட்டம் முடிந்து அந்த இயக்கம் அழிந்து விட்டது என நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால் அந்த இயக்கம் அழியவில்லை. இன்னும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்பதை ஜெனிவாவில் பார்த்தேன் என்றார் அவர்.
Share this article :

சிறப்பு செய்திகள்

 
Support : Copyright © 2011. Daily News Bit - Tamil News - All Rights Reserved