.

Home » » த்ரிஷா அழுகை சொல்லும் சேதி!

த்ரிஷா அழுகை சொல்லும் சேதி!


இரண்டு நாட்களாக எங்கு பார்த்தாலும் த்ரிஷா அழுதார்... கண்ணீர் விட்டார் என்றெல்லாம் செய்தி.

பிரபுதேவா பார்ட்டியில் கொஞ்சம் ஓவராகிவிட்டதோவென்று விசாரித்தால்... விஷயம் அப்படியொன்றும் புதுசில்லை.

த்ரிஷாவும் அவர் அம்மாவும் அடிக்கடி செய்தியாளர்களுடன் விளையாடும் 'கல்யாணம்...', 'ம்ஹூம் இப்போ இல்லை' சமாச்சாரம்தான் இது.

தம்மு படத்தில் இவர் ஜூனியர் என்டிஆருக்கு ஜோடியாக நடித்துள்ளார். படத்தின் கடைசி நாள் ஷூட்டிங்கில் இயக்குநரின் காலில் விழுந்து ஆசி கண்ணீர் தளும்ப ஆசி பெற்றாராம் அம்மணி!

ஏன் இந்த கண்ணீர் என்றதற்கு, இனி படம் நடிக்கும் ஐடியா இல்லை என த்ரிஷா சொன்னதாக தெலுங்கு தேசத்தவர்கள் செய்தி வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழில் சமரன் படத்தில் மட்டும்தான் நடித்துக் கொண்டிருக்கிறாராம். ஆனால் அதற்காக இது அவரது இறுதி முடிவு என்று யாரும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டாம். அம்மணியின் கலைதாகம் எப்போது வேண்டுமானாலும் பீறிட்டுக் கிளம்பும்... புதுப்பட அறிவிப்பு வரலாம்..!
Share this article :

சிறப்பு செய்திகள்

 
Support : Copyright © 2011. Daily News Bit - Tamil News - All Rights Reserved