.

Home » » இனஅழிப்பு குற்றவாளியை பிரித்தானியாவிற்குள் அனுமதிக்காதே! 26ல் கவனயீர்ப்பு போராட்டம்!

இனஅழிப்பு குற்றவாளியை பிரித்தானியாவிற்குள் அனுமதிக்காதே! 26ல் கவனயீர்ப்பு போராட்டம்!


பிரித்தானிய அரசி முடிசூட்டிய அறுபதாவது வருட நிறைவுவிழாவிற்கு சிங்கள தேசத்தின் அதிபரும் பெரும் இனஅழிப்பு ஒன்றின் பிரதான குற்றவாளியுமான மகிந்த ராஜபக்ச வருவதை அனுமதிக்கவேண்டாம். எனக் கோரி எதிர்வரும் 26ம் நாள் லண்டனில் கவனயீர்ப்பு போராட்டம் நடைபெறவுள்ளது.
இது தொடர்பாக பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக்குழு விடுத்துள்ள அழைப்பு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பிரித்தானிய அரசி முடிசூட்டிய அறுபதாவது வருட நிறைவுவிழாவே களங்கம் சூழப்போகிறது.

அந்த விழாவுக்கு சிங்கள தேசத்தின் அதிபரும் பெரும் இனஅழிப்பு ஒன்றின் பிரதான குற்றவாளியுமான மகிந்தராஜபக்ச வருவதை அனுமதிக்கவேண்டாம்.

லட்சக்கணக்கான தமிழ்மக்களை கொன்று குவித்து தமிழர்பிரதேசங்களில் இன்றும் இராணுவ ஆட்சியை நடாத்திவரும் மகிந்த ராஜபக்ச இந்த விழாவில் கலந்து கொள்வது உலக மானுட பண்புகளுக்கும் மனித உரிமைகளுக்கும் பெருத்த அவமானம் ஆகும்.

அத்துடன் பாரம்பரியம் மிக்க பிரித்தானிய முடியாட்சிக்கும் இது மிகப்பெரும் களங்கத்தையும் வரலாற்று அவமானத்தையும் தந்துவிடும்.

மனித உரிமைகளையும் சர்வதேச சட்டங்களையும் காலில் போட்டு மிதித்து அதன்மீது ஏறிநின்று கொடும் ஆட்சி புரியும் மகிந்த ராஜபக்சவை பிரித்தானியாவிற்குள் அனுமதிக்கவேண்டாம் எனக் கோருவோம்.

எமது ஒன்றுதிரண்ட எதிர்ப்பையும் அதிருப்தியையும் வெளிப்படுத்துவோம்;. ஜெனீவா மனித உரிமை கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் குறிப்பிடப்பட்ட விடயங்களை நிறைவேற்ற மறுக்கும் போர்க்குற்றவாளிக்கு செங்கம்பள வரவேற்பு கொடுப்பது சர்வதேச மனித உரிமை சட்டங்களை அவமதிப்பது ஆகும்.

முள்ளிவாய்க்காலை இரத்தம் நிறைந்த மரணங்களுடனும் அவலங்களுடனும் அவன் எமக்கு வழங்கினான்.

சர்வதேச இனஅழிப்பு குற்றவாளிக்கூண்டில் அவனை ஏற்றும் வரை நாம் ஓயமாட்டோம் என்பதை தெரியவைப்போம்.

முள்ளிவாய்க்காலில் காப்பாற்ற யாருமே இல்லையா என்று எமது உறவுகள், குழந்தைகள், முதியோர்,பெண்கள் கதறிய கதறலுக்கு நீதி கிடைக்கும்வரை நாம் ஓயமாட்டோம் என்பதை அனைத்துலகத்திற்கு வெளிப்படுத்துவோம்.

போராட்டம் நடைபெறும் காலம்: 26-05-2012 மாலை 4 மணிமுதல் 7மணிவரை

இடம்: 10 Downing Street
London
SW1A 2AA
(nearest tube station Westminster,)

தொடர்புகட்கு: பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக்குழு 075 5033 6414
Share this article :

சிறப்பு செய்திகள்

 
Support : Copyright © 2011. Daily News Bit - Tamil News - All Rights Reserved