.

Home » » லண்டனில் ஈழத் தமிழரிடம் கத்திமுனையில் பணம் பறிக்க முயற்சி!

லண்டனில் ஈழத் தமிழரிடம் கத்திமுனையில் பணம் பறிக்க முயற்சி!


லண்டன் நகரில் கொனில்ஹில் பகுதியில் இலங்கைத் தமிழர் ஒருவரின் வர்த்தக நிலையத்திற்குள் புகுந்த நபரொருவர் கத்தியைக் காட்டி அவரை மிரட்டி பணம் பறிக்க முயற்சித்துள்ளார்.
எனினும் 27 வயதுடைய இலங்கை தமிழரான ஜெனா தெய்வேந்திரன் குறித்த நபரிடம் இருந்து தன்னை சூட்சமமான முறையில் காப்பாற்றிக் கொண்டுள்ளார்.

இந்த சம்பவம் பற்றி தெரியவருவதாவது,

லண்டனில் நான்கு வருடங்களாக வசித்து வரும் ஜெனா தெய்வேந்திரன் கொனில்ஹில் பகுதியில் வர்த்தகநிலையமொன்றை நடாத்தி வருகிறார்.

கடந்த திங்களன்று அவரது வர்த்தக நிலையத்திற்கு வந்த நபரொருவர் பியர் அருந்திவிட்டு அரை மணித்தியாலத்தின் பின் தன்னுடைய 50 யூரோ பெறுமதியான கைத்தொலைபேசி தொலைந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

எனினும் அதனை தான் பார்க்கவில்லை என ஜெனா தெய்வேந்திரன் தெரிவித்ததை அடுத்து அருகில் இருந்த கத்தியை எடுத்து அவரை மிரட்டி பணம் கேட்டுள்ளார் குறித்த நபர்.

இந்த சம்பவத்தில் இருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள ஜெனா தெய்வேந்திரன் தனது சகோதரனுக்கு அழைப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இந்த நிலையில் சகோதரர் வர தாமதம் ஏற்பட்டது.  எனினும் அவர் தன்னை ஒருவகையாக காப்பாற்றிக் கொண்டார்.

சம்பவம் இடம்பெற்று முடிந்ததும் அவ்விடத்திற்கு பொலிஸார் வருகை தந்துள்ளனர். நடந்தவற்றை கூறிய ஜெனா தெய்வேந்திரன், தனது எதிர்காலம் கருதி பொலிஸாரிடம் முறைப்பாடு செய்ய மறுத்ததால் பொலிஸார் அங்கிருந்து சென்றுவிட்டனர்.

முறைப்பாடு கிடைக்காததால் சந்தேகநபர்களை கைது செய்ய முடியாத கட்டத்தில் உள்ள பொலிஸார் மறுபடியும் அப்படி ஏதாவது நடந்தால் அறியத்தரும்படி கூறியுள்ளனர்.


இவ்வாறு இடம்பெற்ற சம்பவம் CCTV பாதுகாப்பு கமராவில் பதிவாகியுள்ளது.
Share this article :

சிறப்பு செய்திகள்

 
Support : Copyright © 2011. Daily News Bit - Tamil News - All Rights Reserved