.

Home » » இங்கிலாந்து விமான நிலையத்தில் பயணிகளின் முழு உடலையும் சோதனையிட முடிவு

இங்கிலாந்து விமான நிலையத்தில் பயணிகளின் முழு உடலையும் சோதனையிட முடிவு


இங்கிலாந்து விமான நிலையங்கள் அனைத்திலும், முழு உடலையும் ஸ்கேனர் மூலம் சோதனையிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இரட்டை கோபுரங்களை அல்கொய்தா தீவிரவாதிகள் தகர்த்த பின், பல நாடுகள் பாதுகாப்பை பலப்படுத்தின.

அத்துடன் பல்வேறு கெடுபிடிகளையும் கொண்டு வந்தன. அமெரிக்காவில் முக்கியமாக விமான நிலையங்களில் பயணிகளின் முழு உடலையும் சோதனை செய்யும் வகையில், பாடி ஸ்கேனர்கள் கொண்டு வரப்பட்டன.

இதற்கு பல நாடுகள் பலத்த எதிர்ப்பு தெரிவித்தன. முழு உடல் சோதனை செய்யும் போது வெளிப்படும் கதிர்வீச்சால் உடல்நலம் கெடும், அத்துடன் தனிமனித சுதந்திரம் பாதிக்கப்படும் என்று சர்ச்சை எழுந்தது. அதன்பின் அந்த திட்டம் கைவிடப்பட்டது.

இந்நிலையில் இங்கிலாந்தில் உள்ள எல்லா விமான நிலையங்களிலும் முழு பாடி ஸ்கேனர் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஐரோப்பிய யூனியன் பல்வேறு ஆலோசனைகள் நடத்தி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளன. ஸ்கேனர் சோதனையின் போது, வெளிப்படும் கதிர்வீச்சு மிகவும் குறைவானது. இது பாதுகாப்பானது. எந்த பாதிப்பும் ஏற்படாது என தெரிவிக்கப்பட்டது.

எனவே முதல்கட்டமாக மான்செஸ்டர் விமான நிலையத்தில் சோதனை அடிப்படையில் முழு உடலை சோதனை செய்யும் ஸ்கேனர்கள் பொருத்தும் பணி நடந்து வருகிறது.
Share this article :

சிறப்பு செய்திகள்

 
Support : Copyright © 2011. Daily News Bit - Tamil News - All Rights Reserved