சிரியாவின் ஜனாதிபதி ஆசாத்துக்கும், லிபியாவின் முன்னாள் ஜனாதிபதி மம்மர் கடாஃபிக்கும் நெருக்கமானவர்களின் கறுப்புப்பணப் பட்டியலை சுவிஸ் வங்கியின் (MROS) ஒரு பிரிவு வெளியிட்டது.
இப்பட்டியலின் அடிப்படையில் மத்திய புலனாய்வுத் துறை இவர்களின் மீது நடவடிக்கை எடுக்கத் தீர்மானித்துள்ளது.
வங்கியின் ஆண்டறிக்கை கடந்த வாரம் வெளியான போது சந்தேகப்படும் பணப்பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை 40 சதவீதம் அதிகரித்திருப்பதாக தெரியவந்தது.
அரேபிய நாடுகளில் ஏற்பட்ட எழுச்சிக்குப் பின்பு 3.3 பில்லியன் சுவிஸ் ஃபிராங்க் அளவிற்கு பணம் சுவிஸ் வங்கியில் பாதுகாக்கப்பட்டுள்ளது.
எகிப்திய சர்வாதிகாரி ஹோஸ்னி முபாரக்கின் நெருங்கிய நண்பர்களும் பத்துப் பன்னிரெண்டு குடும்ப உறுப்பினர்களும் விசாரணைக்கு ஆளாகினர்.