கிளிநொச்சியில் பஸ்தரிப்பு நிலையத்தில் அன்றாடம் பயணத்திற்காக காத்திருக்கும் அன்றாடம் மாணவிகள், இளம்பெண் உத்தியோகத்தர்கள் என பலதரப்பட்ட பணிகளில்
ஈடுபடும் பெண்கள் மீதான சேஷ்டைகள் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த பகுதியில் மதுபோதையிலும் மற்றும் எதுவித காரணமின்றியும் குழுமுகிற ரவுடிக் கூட்டங்கள் அங்கு பஸ்ஸிற்காக காத்திருக்கும் பெண்கள் மீது சேஷ்டைகளில் ஈடுபடுவது.கெட்ட வார்த்தைகளை பேசுவது போன்ற ஈடுபட்டு வருவது கலாச்சாரம் பேணும் அமைப்பால் இனங்காணப்பட்டுள்ளது.
அண்மையில் இத்தகைய செயலில் ஈடுபட்ட ஒருவரின் படங்களும் அவரது நண்பர்களின் படங்களும் கலாச்சாரம் பேணும் குழுவால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த நபர் பஸ்நிலையப் பகுதியில் தெருவோரக் கடை வைத்திருப்பவர் என இனங்காணப்பட்டுள்ளார்.
எனவே இத்தகைய நபர்களை அறிந்து எச்சரிக்கையாய் இருக்கும்படியும், இவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்க எண்ணியிருப்பதாகவும் கலாச்சாரம் பேணும் குழு தெரிவித்துள்ளது.