பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில் பிராங்கோய்ஸ் ஹோலண்டே தெரிவு செய்யப்பட்டது முதல், அந்நாட்டு வெளிவிவகாரத்துறை ஒரு பெரிய பிரச்னையை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் தவித்து வருகின்றது.
அது ஒன்றுமில்லை ஹோலண்டே வலேரி திரியர்வெய்லர் என்பவரை இன்னும் திருமணம் செய்து கொள்ளாமலே வாழ்க்கைத் துணையாக ஏற்றுக்கொண்டு வாழ்ந்து வருகிறார்.
ஜனாதிபதியாக பதவி ஏற்ற பிறகு வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டியிருக்கும். போப்பாண்டவரைச் சந்திப்பதற்காக ரோமாபுரி செல்வதாக இருந்தாலும், வளைகுடா நாடுகளுக்கும், முஸ்லிம் நாடுகளுக்கும் செல்வதாக இருந்தால் சில சங்கடங்கள் நேரும்.
திருமணமாகாத தோழியை அரசு நிகழ்ச்சிகளில் அதிகாரப்பூர்வ விருந்தினராக அந்த நாடுகள் அங்கீகரித்து இடம் தராது. மேலும் அவருடைய தங்குமிடம், பயணம், சாப்பாடு, பாதுகாப்பு ஆகியவற்றுக்கு ஏற்பாடுகளைச் செய்வதிலும் தயக்கம் ஏற்படும்.
எனவே மே மாதம் 15ஆம் திகதி அரசு இல்லமான எலிஸி அரண்மனையில் குடி வருவதற்குள் அதிபருக்குத் திருமணம் ஆகிவிட்டால் நல்லது என்று அவர்கள் கருதுகிறார்கள்.
வலேரிக்கு வயதுவந்த 2 பையன்கள் இருக்கின்றனர். இதற்கு முன்னதாக 2 முறை திருமணம் செய்து 2 கணவர்களையும் விவாகரத்து செய்திருக்கிறார் வலேரி. பத்திரிகையாளராகப் பணி புரிகிறார்.
திருமணம் செய்யாமல் ஜனாதிபதியுடன் வெளிநாடு சென்றால் பிரச்னை வருமே?' என்று ஒரு நிருபர் வலேரியிடம் கேட்டபோது, எங்கே போப்பாண்டவரைச் சந்திப்பதாக இருந்தால்தானே, பார்த்துக் கொள்ளலாம் என்று கூறிவிட்டார்.
இது என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை, தேவையில்லாமல் இதில் தலையிட வேண்டாம் என்றும் அந்த நிருபரை அவர் எச்சரித்து விட்டார்.