யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்டு வரும் வகுப்பு பகிஸ்கரிப்பு போராட்டத்தினைத் தொடர்ந்து, பல்கலைக்கழகத்தைச் சுற்றி தொடர்ச்சியாக பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் தாக்கப்பட்டதைத் கண்டித்து கடந்த சில தினங்களாக மாணவர்கள் பேராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், மாணவர்கள் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடலாம் என்ற அச்சம் காரணமாக பல்கலைக்கழக கழகச் சூழல் சிவில் உடையிலும் சீருடையிலும் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
குறிப்பாக, இவ்வாறு பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளமையினால் தொடர்ச்சியாக பதற்றமான ஒரு சூழலே காணப்படுகின்றது.
இதேவேளை தமக்கான பாதுகாப்பை பல்கலைக்கழக நிர்வாகம் வழங்கும் வரையில் போராட்டத்தைக் கைவிடப் போவதில்லையென மாணவர்கள் தெரிவித்துள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.