.

Home » » மகிந்தவுக்கு அழைப்பு விடுத்ததால், திணறும் பக்கிங்ஹாம் அரண்மனை அதிகாரிகள்

மகிந்தவுக்கு அழைப்பு விடுத்ததால், திணறும் பக்கிங்ஹாம் அரண்மனை அதிகாரிகள்


பிரித்தானிய மகாராணி இரண்டாவது எலிசபெத் மூடிசூடி அறுபதாண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு நடைபெறவுள்ள விழாவுக்கு இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு அழைப்பு விடுத்த, பக்கிங்ஹாம் அரண்மனை அதிகாரிகள் வெறுப்படைந்து போயுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விழாவில் பங்கேற்பதற்காக நான்கு நாள் பயணத்தை மேற்கொண்டு வரும் யூன் 4ம் நாள் மகிந்த ராஜபக்ச லண்டன் செல்லவுள்ளார்.

இதுபற்றிய தகவல்கள் வெளியானதும், அங்குள்ள புலம்பெயர் தமிழர்கள் ராஜபக்சவுக்கு எதிராகப் போராட்டங்களை முன்னெடுக்கத் தயாராகி வருகின்றனர்.

அதேவேளை, மகிந்த ராஜபக்சவுக்கு அழைப்பு விடுத்ததைக் கண்டித்து பக்கிங்ஹாம் அரண்மனைக்கு கண்டனக் கடிதங்கள் பல அனுப்பப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில், கடந்த 2010ம் ஆண்டு ஒக்ஸ்போட் யூனியனில் உரையாற்ற லண்டன் சென்ற மகிந்த ராஜபக்ச பாதுகாப்புக் காரணங்களால் உரையாற்றாமலே திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டதைச் சுட்டிக்காட்டி இம்முறை அவருக்குப் பொருத்தமான பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று இலங்கை அரசாங்கம் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது.

இதனால் பக்கிங்ஹாம் அரண்மனை அதிகாரிகள், இந்தச் சர்ச்சையில் இருந்து எவ்வாறு விடுபடுவதென்று தெரியாமல் திணறுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Share this article :

சிறப்பு செய்திகள்

 
Support : Copyright © 2011. Daily News Bit - Tamil News - All Rights Reserved