.

Home » » யாழில் காணாமல் போன சிறுவன் ஒரு வருடத்தின் பின் கிழக்கில் மீட்பு! முஸ்லீமாக மதமாற்றம்

யாழில் காணாமல் போன சிறுவன் ஒரு வருடத்தின் பின் கிழக்கில் மீட்பு! முஸ்லீமாக மதமாற்றம்


யாழ்.குடாநாட்டில் அண்மைக்காலங்களில் காணாமல் போகும் சிறார்களது நிலை தொடர்பான தெளிவான தகவல்கள் இல்லாதிருந்து வரும் நிலையினில் அவ்வாறு காணாமல் போன சிறுவன் ஒருவன் கிழக்கு மாகாணத்தில் ஒரு வருடத்தின் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளான்.
தமிழ் சிறுவனை கடத்தி முஸ்லீமாக மாற்றி கொடுமைப்படுத்திய முஸ்லீம்கள்! அதிர்ச்சியில் தமிழ் மக்கள்

யாழ்ப்பாணத்திலிருந்து தமிழ் சிறுவன் ஒருவனை கடத்திச் சென்று முஸ்லீமாக மாற்றி அவனை கொடுமைப்படுத்திய மிகவும் பரபரப்பான சம்பவம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.

சண்டிலிப்பாய் மாசியப்பிட்டியைச் சேர்ந்த பரமநாதன் ரஜிராம் வயது 12 என்ற மாணவனே இவ்வாறு கடத்திச்செல்லப்பட்டவராவார்.

யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பகுதியிலிருந்து கடந்த வருடம் யூன் மாதம் 8ம் திகதி இம்மாணவன் முஸ்லீம் ஒருவரால் ஆசை வார்த்தை கூறி துவிச்சக்கர வண்டியில் ஏற்றி செல்லப்பட்டுள்ளார்.

தொடர்ந்து அங்கிருந்த வான் ஒன்றில் ஏற்றப்பட்டு அவனை யாழ். ஐந்து சந்திப் பகுதிக்கு கொண்டு வந்து அன்றிரவு அவனை மட்டக்களப்பு காத்தான்குடிக்கு கடத்திச் சென்றுள்ளனர்.

அங்கு  அவனுக்கு சுண்ணத்து பண்ணப்பட்டு தொடர்ந்து அன்வர் என பெயர் மாற்றப்பட்டு வீடொன்றில் தங்கவைக்கப்பட்டு அந்த வீட்டிலிருந்த மூன்று சிறுமியர்களை பாடசாலைக்கு கூட்டிச்செல்வது கடைக்கு சென்று பொருட்கள் வாங்குவது என வீட்டு வேலை செய்யுமாறு கொடுமைப்படுத்தப்பட்டுள்ளான்.

இதன் பின்னர் இச்சிறுவன் யாழ்ப்பாணத்திற்கு இவ்வருடம் கொண்டு வரப்பட்டு நடைபாதை கடையொன்றில் வியாபாரத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

வியாபாரம் செய்து கொண்டிருக்கும்போது கடந்த 17ம் திகதி இவரை இனங்கண்டு சண்டிலிப்பாயைச் சேர்ந்த ஒருவர் இது தொடர்பில் தாயாருக்கு விடயத்தை தெரியப்படுத்தியுள்ளார்.

பின்னர் தனது மகனை இனங்கண்ட தாயாரைக்கண்டு மகன் ஏன் மட்டக்களப்பிற்கு வந்தீர்கள் என கண்ணீர்; சிந்தி கதறி அழுதுள்ளார். ஏனெனில் தான்  எங்கிருக்கின்றேன் என்பதே அவனுக்கு தெரியவில்லை.

இதன்போது உடனடியாகவே தாயார் சுதாகரித்துச் செயற்பட்டு ஏற்கனவே மானிப்பாய் பொலிஸில் முறையிட்டிருந்ததால் பொலிஸாரிடம் சென்று விடயத்தை தெரிவித்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் குறித்த இரு வர்த்தகர்களையும் உடனடியாக கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்டவர்களை மல்லாகம் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது சிறுவனை மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்துமாறு தெரிவித்ததோடு விசாரணைகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளார்.

பின்னர் சிறுவன் வழங்கிய தகவலின் அடிப்படையில் ஐந்து சந்தியிலிருந்த வீடொன்றிலிருந்து சிறுவன் கடைசியாக காணாமல் போன அன்று அணிந்திருந்த பாடசாலை சீருடை புத்தகப்பை என்பவற்றை பொலிஸார் மீட்டனர்.

இதேவேளை சிறுவன் இன்னமும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படவில்லையென்பதோடு சிறுவனை வேலைக்கு அமர்த்திய நடைபாதை வியாபாரிகள் இருவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால் குறித்த சிறுவனை பொலிஸார் விலங்கிட்டு வைத்தியசாலைக்கு கொண்டு வந்ததை கண்ட மனித உரிமைகள் ஆணைக்குழுவினர் பொலிஸாரின் ஒரு பக்க சார்பான இச்செயலுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

இச்சிறுவன் காணாமல் போனது தொடர்பில் தாயார் ஏற்கனவே மனித உரிமைகள் ஆணைக்குழு சிறுவர் நன்னடத்தை பிரிவு என்பவற்றில் முறையிட்டிருந்ததால் அவர்கள் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க பொலிஸாரை வற்புறுத்தி வருகின்றனர்.

முஸ்லீம்கள் மேற்கொண்ட இக்கடத்தல் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பதோடு எரிச்சலையும் தோற்றுவித்துள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் காரைநகரில் வலுக்குறைந்த இளம் பெண் ஒருவரையும் முஸ்லீம்கள் இருவர் கற்பழித்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது
Share this article :

சிறப்பு செய்திகள்

 
Support : Copyright © 2011. Daily News Bit - Tamil News - All Rights Reserved