.

Home » » முள்ளிவாய்க்கால் பகுதியில் புத்த விகாரை இரகசியமான முறையில் அமைத்தது சிங்கள இனவெறிஅரசு

முள்ளிவாய்க்கால் பகுதியில் புத்த விகாரை இரகசியமான முறையில் அமைத்தது சிங்கள இனவெறிஅரசு


முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நடைபெற்ற 3 வருட நிறைவு அண்மையில் நினைவு கூரப்பட்ட வேளையில் அதற்கு அருகிலுள்ள வட்டுவாகல் கிராமத்தில் இரகசியமாக அமைக்கப்பட்ட புத்த விகாரை ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
பாரிய இனப்படுகொலை இடம்பெற்ற இந்தப் பகுதிக்குள் தமிழர்கள் எவரும் வசிப்பதற்கோ செல்வதற்கோ அனுமதிக்கப்படாத அதேவேளையில், மிகவும் இரகசியமான முறையில் இங்கு புத்த விகாரை அமைக்கப்பட்டுள்ளமையை அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.

இரண்டு வாரங்களுக்கு முன்னர் முல்லைத்தீவின் கரையோரமான கொக்கிளாயிலிருந்து முள்ளிவாய்க்காலை இணைக்கும் கரையோரப் பாதை சீனாவின் ஆதரவில் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.

சிங்களக் குடியேற்றங்களைத் துரிதப்படுத்தும் நோக்கத்துடனேயே இந்தப் பாதை திறக்கப்பட்டது.

இந்த நிலையிலேயே முள்ளிவாய்க்காலுக்கு அருகிலுள்ள வட்டுவாகல் கிராமத்தில் இந்த புத்த விகாரை திறக்கப்பட்டுள்ளது.
Share this article :

சிறப்பு செய்திகள்

 
Support : Copyright © 2011. Daily News Bit - Tamil News - All Rights Reserved