கோட்டை ஸ்ரீ ஜயவர்த்தனபுர வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வரும் பாராளுமன்ற உறுப்பினரான துமிந்த சில்வாவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நேற்று நலம் விசாரித்ததாக நம்பகமான வட்டாரங்களில் இருந்து தெரியவருகிறது.
துமிந்த சில்வா எம்.பி.யின் உடல் நிலையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் எதிர்காலத்தில் அவருக்கு வழங்கப்பட வேண்டிய சிகிச்சைகள் தொடர்பில் வைத்தியசாலை அதிகாரிகளிடம் ஜனாதிபதி விசாரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
முல்லேரியாவில் கடந்த மாதம் 8 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஜனாதிபதியின் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கான ஆலோகர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர உயிழந்ததுடன் அச்சம்பவத்தில் துமிந்த சில்வா எம்.பி. படுகாயமடைந்தார்.
தலையில் துப்பாக்கிச் சன்னங்கள் இரண்டு துளைத்திருந்த நிலையில் அவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்தும் தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையிலேயே, அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற பொதுநலவாய மாநாடுகளின் 22 ஆவது அரச தலைவர்களின் மாநாட்டில் கலந்து கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான குழு நேற்றுக் காலை நாடு திரும்பியது.